சென்னை, அக்.4-தமிழ்நாடு தொலைத் தொடர்பு
வட்டம், சென்னை தொலைபேசி ஆகிய வற்றின் தலைமை பொது மேலாளர்கள் அஷ்ரப் கான்,
பாலசுப்ரமணியன் ஆகியோர் சென்னையில் நேற்று கூறியதாவது:
பிஎஸ்என்எல் நிறுவனம் தோன்றி 12 ஆண்டுகள்
ஆகின்றன. அதனை முன்னிட்டு பல்வேறு சலுகை களையும், திட்டங்களையும்
அறிமுகப்படுத்து கிறோம். சாதாரண தொலைபேசி வைத்திருப்பவர்கள் மாதம் 400
ரூபாய் வாடகையில் நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் சாதாரண தொலைபேசியில்
அளவில்லாமல் பேசிக் கொள்ளலாம். மாதம் 600 ரூபாய் வாடகையில் நாடு முழுவதும்
உள்ள பிஎஸ்என்எல் சாதாரண தொலைபேசி, பிஎஸ் என்எல் செல்போன்களுக்கு
அளவில்லாமல் பேச முடியும். அதேபோல் மாதாந்திர கட்டணத்துடன் 59 கூடுதலாக
செலுத்தினால் இரவு 10 முதல் காலை 7 மணி வரை பிஎஸ்என்எல் இணைப்புகளுக்கு
அளவில்லாமல் பேச முடியும்.
செல்போன் வாடிக்கையாளர்கள் டாப் அப்
செய்யும் தொகைக்கு கூடுதல் 20 சதவீதம் தொகைக்கு பேசிக் கொள்ளலாம். ஏற்கனவே
அகண்ட அலைவரிசை, இன்டர்நெட் இணைப்பு வைத்திருப் பவர்களுக்கு டேட்டா கார்டு
500, 800 ரூபாய்களில் கிடைக்கும். செல்போன் எண்ணை மாற்றாமல் நிறுவனத்தை
மட்டும் மாற்றிக்கொள்ளும் வசதியை பயன்படுத்தி தமிழ்நாட்டில் மற்ற
நிறுவனங்களைச் சேர்ந்த 70 ஆயிரம் பேர் கூடுதலாக கிடைத்துள்ளனர். இவ் வாறு
அஷ்ரப்கான், பாலசுப்ரமணியன் ஆகியோர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment