இந்த நிதியாண்டின் இறுதியில் வீடியோ
கால் போன்ற நவீன வசதிகளை லேண்டுலைன் தொலைபேசிகளில் வழங்க ரூ. 400 கோடியை முதலீடு
செய்ய திட்டமிட்டிருக்கிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.
அதாவது நெக்ஸ்ட் ஜெனரேஷன் நெட்வொர்க்
என்று சொல்ல கூடிய நவீன வசதிகளை இனி லேண்டுலைனில் வழங்க இருப்பதாக பிஎஸ்என்எல்
நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.கே. உபாத்தியாய் கூறியுள்ளார்.
மொபைல்போனுக்கு ஒப்பிட்டு
பார்க்கையில் லேண்டுலைன் வாடிக்கையாளர்கள் வெகுவாக குறைந்து வருகின்றனர் என்று
தான் சொல்ல வேண்டும். அதிலும் லேண்டுலைனை பயன்படுத்துவது கூட பிராடுபேண்டு
வசதிக்காக என்றாகிவிட்டது. இதனால் அரசு நடத்தும் பிஎஸ்என்எல் நிறுவனம் நவீன
வசதிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த நவீன வசதியின் மூலம் வீடியோ
காலிங், கால் ட்ராஸ்ஃபர் ஆகிய வசதிகளை லேண்ட்லைனிலும் பெறலாம். இன்னும் குறிப்பாக
சொல்லப்போனால், மொபைலில் பெற கூடிய வசதிகள் அனைத்தையும் லேண்ட்லைனிலும் பெற
இத்திட்டம் வழிவகுக்கும்.
இதனால் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு
கிடைக்கும் வசதிகள் இனி லேண்ட்லைன் வாடிக்கையாளர்களும் பயன்படுத்தும் வகையில்
மேம்படுத்தப்பட்ட வசதிகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.
நெக்ஸ்ட் ஜெனரேஷன் நெட்வொர்க் என்ற
நவீன வசதியின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்க முடியும்
என்பதோடு, செயல்பாடு மற்றும் பராமரிப்பின் செலவுகளையும் சற்று கட்டுப்படுத்த
முடியும் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குனருமான
ஆர். கே. உபாத்தியாய் தெரிவித்திருக்கிறார்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மார்கெட்
பங்குகளின் மதிப்பு 69 சதவிகிதமாக உள்ளது. கடந்த மே மாதம் 3.15 கோடியாக இருந்த
மொத்த லேண்டுலைன் வாடிக்கையாளர்கள்களின் எண்ணிக்கை, ஜூன் மாதம் 31.43 கோடியாக
குறைந்துள்ளதாக புள்ளிவிவரம் காட்டுகிறது.
இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் 2.17
கோடி லேண்டுலைன் வாடிக்கையாளர்களையும், 9.8 கோடி மொபைல்போன் வாடிக்கையாளர்களையும்
கொண்டுள்ளது. இந்த தகவல்கள் லேண்டுலைன் வாடிக்கையாளர்கள் குறைந்து வருவதையே
குறிக்கிறது.
இதனால் மொபைல்போனில் உள்ள வசதிகளை லேண்டுலைனிலும் வழங்க
ரூ. 400 கோடியை முதலீடு செய்யும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திட்டத்தின் மூலம்
நிச்சயம் லேண்டுலைன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும் என்று நம்பலாம்.
நன்றி : தட்ஸ் தமிழ்
No comments:
Post a Comment