பிஎஸ்என்எல் ரூபாய் 110 முழு தொகைக்கு பேசலாம் இந்த வசதி 27/06/2015 முதல் 29/06/2015 வரை BSNL FULL TALK VALUE OFFER FOR RS.110 FROM 27/06/2015 TO 29/06/2015

Sunday, 19 August 2012

"சிம்' கார்டு வாங்க போலி ஆவணங்கள் கொடுத்தால்போலீசில் புகார் தெரிவிக்க உத்தரவு


புதுடில்லி:"மொபைல் போன், "சிம்' கார்டு பெறுவதற்காக, வாடிக்கையாளர்கள் போலியான ஆவணங்களைக் கொடுத்தால், சம்பந்தபட்ட டீலர்கள், இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க வேண்டும்' என, தொலை தொடர்புத் துறையின் புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலர், போலியான ஆவணங்களைக் கொடுத்து, மொபைல் போனுக்கான, "சிம்' கார்டுகளைப் பெற்று, அவற்றை, பயங்கரவாதச் செயல்களுக்காகப் பயன்படுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, "சிம்'கார்டுகள் வழங்குவதற்கு, புதிதாகக் கடுமையான விதிமுறைகளை, தொலை தொடர்புத் துறை உருவாக்கியுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள், நவம்பர் இரண்டாம் வாரத்திலிருந்து, அமலுக்கு வரவுள்ளன.

THANKS : DINAMALAR.

Friday, 17 August 2012

வீடியோ கால் வசதியுடன் லேண்ட்லைன்: பிஎஸ்என்எல் புதிய திட்டம்!

இந்த நிதியாண்டின் இறுதியில் வீடியோ கால் போன்ற நவீன வசதிகளை லேண்டுலைன் தொலைபேசிகளில் வழங்க ரூ. 400 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

அதாவது நெக்ஸ்ட் ஜெனரேஷன் நெட்வொர்க் என்று சொல்ல கூடிய நவீன வசதிகளை இனி லேண்டுலைனில் வழங்க இருப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.கே. உபாத்தியாய் கூறியுள்ளார்.

மொபைல்போனுக்கு ஒப்பிட்டு பார்க்கையில் லேண்டுலைன் வாடிக்கையாளர்கள் வெகுவாக குறைந்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் லேண்டுலைனை பயன்படுத்துவது கூட பிராடுபேண்டு வசதிக்காக என்றாகிவிட்டது. இதனால் அரசு நடத்தும் பிஎஸ்என்எல் நிறுவனம் நவீன வசதிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த நவீன வசதியின் மூலம் வீடியோ காலிங், கால் ட்ராஸ்ஃபர் ஆகிய வசதிகளை லேண்ட்லைனிலும் பெறலாம். இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், மொபைலில் பெற கூடிய வசதிகள் அனைத்தையும் லேண்ட்லைனிலும் பெற இத்திட்டம் வழிவகுக்கும்.
இதனால் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வசதிகள் இனி லேண்ட்லைன் வாடிக்கையாளர்களும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

நெக்ஸ்ட் ஜெனரேஷன் நெட்வொர்க் என்ற நவீன வசதியின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்க முடியும் என்பதோடு, செயல்பாடு மற்றும் பராமரிப்பின் செலவுகளையும் சற்று கட்டுப்படுத்த முடியும் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குனருமான ஆர். கே. உபாத்தியாய் தெரிவித்திருக்கிறார்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மார்கெட் பங்குகளின் மதிப்பு 69 சதவிகிதமாக உள்ளது. கடந்த மே மாதம் 3.15 கோடியாக இருந்த மொத்த லேண்டுலைன் வாடிக்கையாளர்கள்களின் எண்ணிக்கை, ஜூன் மாதம் 31.43 கோடியாக குறைந்துள்ளதாக புள்ளிவிவரம் காட்டுகிறது.

இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் 2.17 கோடி லேண்டுலைன் வாடிக்கையாளர்களையும், 9.8 கோடி மொபைல்போன் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. இந்த தகவல்கள் லேண்டுலைன் வாடிக்கையாளர்கள் குறைந்து வருவதையே குறிக்கிறது.

இதனால் மொபைல்போனில் உள்ள வசதிகளை லேண்டுலைனிலும் வழங்க ரூ. 400 கோடியை முதலீடு செய்யும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திட்டத்தின் மூலம் நிச்சயம் லேண்டுலைன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும் என்று நம்பலாம்.
 
நன்றி : தட்ஸ் தமிழ் 

ரம்ஜான் பண்டிகையையொட்டி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சிறப்பு சலுகை...


சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு(ப்ரீபெய்டு பிளான்) ரூ.786க்கு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி ரூ.786க்கு ரீசார்ஜ் செய்யும் பிரீபெய்டு செல்போன் வாடிக்கையாளர்கள் 1,572 நிமிடங்களுக்கு கட்டணமின்றி பேசலாம். இதில் 786 நிமிடங்கள் பி.எஸ்.என்.எல். உள்ளூர், எஸ்.டி.டி. எண்களுக்கும், மீதமுள்ள 786 நிமிடங்கள் தனியார் நிறுவன உள்ளூர், எஸ்.டி.டி. எண்களுக்கும் பேசலாம்.

மேலும் 786 எஸ்.எம்.எஸ். அனுப்பலாம், 786 எம்.பி.க்கு தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சலுகை 2ஜி, 3ஜி சேவை ஆகிய இரண்டுக்கும் பொருந்தும்.
ரீசார்ஜ் செய்து 90 நாட்கள் வரை இந்த சலுகையை பயன்படுத்தலாம். இந்த மாதம் 21ம் தேதி வரை இந்த சிறப்பு சலுகை அமலில் இருக்கும்.

இது தவிர ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ஈ-ரீசார்ஜ் மற்றும் கார்டு மூலம் ரூ.110, ரூ.220, ரூ.440 மற்றும் ரூ.550க்கு ரீசார்ஜ் செய்தால் முழு தொகைக்கு பேசலாம். இந்த சலுகை வரும் 30 வரை மட்டுமே அமலில் இருக்கும்.


நன்றி : தட்ஸ் தமிழ்