எங்களிடம் 3G மற்றும் 2G புதிய சிம் கார்டுகள், கை பேசிற்க்கான டாப்அப் மற்றும் ரீசார்ஜ்கள், அகண்ட அலைவரிசை மற்றும் வைமேக்ஸ் இணைப்புகள் , புதிய லேன் லைன் இணைப்புகள், டைப்1 மோடம் (NON WI-FI) மற்றும் டைப்2 மோடம் (WI-FI), பிஎஸ்என்எல் 3G USB மோடம் (DATA CARD) கிடைக்கும். WE OFFER 3G AND 2G NEW SIM CARDS, TOPUP AND RECHARGE FOR MOBILE, BROADBAND AND WI-MAX CONNECTIONS, NEW LAN LINE CONNECTION, TYPE1 MODEM (NON WI-FI) AND TYPE2 MODEM (WI-FI), BSNL 3G USB MODEM (DATA CARD) AVAILABLE.
Monday, 24 December 2012
Thursday, 13 December 2012
பொறியியல் மாணவர்களுக்கு கணினி வழி கற்றல் : பி.எஸ்.என்.எல்., அறிமுகம்
சென்னை: ""கணினி வழி கற்றல் முறை (elearning), கிராமப்புற பொறியியல் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்,'' என, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசினார்.
"போதி அக்சஸ் சொலுயூசன்ஸ்' (Bothi Access Solutions) நிறுவனம், பி.எஸ்.என்.எல்., உடன் இணைந்து, பொறியியல் மாணவர்கள், தங்கள் பாடங்களை, கணினி வழி கற்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இவ்வசதியை துவக்கி வைத்து, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசியதாவது:
பொறியியல் கல்லூரிகளில், நல்ல ஆசிரியர்கள், நூலகங்கள் மற்றும் புத்தகங்கள் பற்றாக்குறையால், பொறியியல் கல்வியின் தரம் குறைந்து வருகிறது. இந்நிலையில், பொறியியல் பாடங்களை, மாணவர்கள், கணினி வழி கற்றல் முறையில், எளிதாக பயிலும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது."இ-லேர்னிங்' எனப்படும் இந்த கற்றல் முறை, நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டுமின்றி, கிராமப்புற பொறியியல் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு பாலகுருசாமி பேசினார்.
"போதி அக்சஸ் சொலுயூசன்ஸ்' நிறுவன தலைவர் ரமேஷ் கூறியதாவது:
கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட ஏழு பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான, 231 பாடங்களை, "இ-லேர்னிங்' முறையில் கொண்டு வந்துள்ளோம்.
"செமஸ்டர்' வாரியாக, மாணவர்கள், தங்களுக்கு தேவைப்படும் பாடங்களை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இம்முறையில் உள்ள சிறப்பம்சங்கள், கட்டண விவரம் உள்ளிட்ட விவரங்களை, www.bodhiaccess.com என்ற இணையதளத்தில் பெறலாம்.
இவ்வாறு ரமேஷ் கூறினார்.நிகழ்ச்சியில், மின்வாரிய விஜிலென்ஸ் ஐ.ஜி., சீமா அகர்வால், பி.எஸ்.என்.எல்., தலைமை பொது மேலாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Monday, 19 November 2012
Monday, 8 October 2012
பிராட்பேண்ட் வசதியுள்ள பி.எஸ்.என்.எல். டெலிபோனில் வீடியோ வசதி அறிமுகம்
சென்னை, அக் 8-
தகவல் தொழில்நுட்பத்துறையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. உலகின் எந்த மூளையில் இருந்தாலும் நொடிப்பொழுதில் தொடர்பு கொள்ளக்கூடிய தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளன.
பிராட்பேண்ட் வசதி உள்ளவர்கள் வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் கம்ப்யூட்டர் மூலமாக தொடர்பு கொண்டு பேசலாம். வெப் மூலம் இரு முனைகளில் உள்ளவர்கள் முகங்களை பார்த்து நேரில் பேசுவது போல இன்டர்நெட் வழியாக பேசமுடியும். இருவரின் உருவமும் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் தெரியும்.
இந்த வசதியை வீட்டில் இருந்தோ, அல்லது கம்ப்யூட்டர் மையங்களில் இருந்தோ பெறலாம். தற்போது அதைவிட நவீனமயமாக டெலிபோனில் தொடர்பு கொண்டாலே எதிர் முனையில் உள்ளவர்களின் உருவம் டெலிபோனில் வீடியோ படம்போல் தெரியும்.
இந்த நவீன வசதியை பி.எஸ்.என்.எல். விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதுபற்றி தமிழ்நாடு சர்க்கிள் பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் முகமது அஷ்ரப்கான் கூறியதாவது:-
பி.எஸ்.என்.எல். பிராட் பேண்ட் வசதியுடன் கொண்ட தரைவழி டெலிபோன் சந்தாதாரர்கள் இதை தங்களது டெலிபோனில் பேசுபவர்களின் உருவத்தை நேரில் பார்த்தவாறு பேசும் வசதி இன்னும் 3 மாதத்தில் அறிமுகம் செய்கிறது.
அதற்கான நவீன வசதியுடன் கூடிய டெலிபோனை பொறுத்தினால் பேசுபவர்களின் உருவத்தையும் குரலையும் கேட்கலாம். இந்த வசதி ஏற்கனவே பி.எஸ்.என்.எல். வடக்கு, மற்றும் மேற்கு மண்டலங்களில் செயல்பாட்டில் உள்ளது.
இன்டர்நெட் வசதியுடன் வீடியோ கால் வசதிக்கான கருவியை பொருத்தினால் இந்த வசதியை பெறலாம். சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த வசதி விரைவில் வர உள்ளது.
பி.எஸ்.என்.எல். கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 3ஜி இணைப்புகளுக்கு 1000 டவர்கள் மூலம் சேவை வழங்கப்படுகிறது. மேலும் 500 டவர்கள் அமைக்கப்படுகின்றது. 1140 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆப்டிக் பைபர் கேபிள் போடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தகவல் தொழில்நுட்பத்துறையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. உலகின் எந்த மூளையில் இருந்தாலும் நொடிப்பொழுதில் தொடர்பு கொள்ளக்கூடிய தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளன.
பிராட்பேண்ட் வசதி உள்ளவர்கள் வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் கம்ப்யூட்டர் மூலமாக தொடர்பு கொண்டு பேசலாம். வெப் மூலம் இரு முனைகளில் உள்ளவர்கள் முகங்களை பார்த்து நேரில் பேசுவது போல இன்டர்நெட் வழியாக பேசமுடியும். இருவரின் உருவமும் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் தெரியும்.
இந்த வசதியை வீட்டில் இருந்தோ, அல்லது கம்ப்யூட்டர் மையங்களில் இருந்தோ பெறலாம். தற்போது அதைவிட நவீனமயமாக டெலிபோனில் தொடர்பு கொண்டாலே எதிர் முனையில் உள்ளவர்களின் உருவம் டெலிபோனில் வீடியோ படம்போல் தெரியும்.
இந்த நவீன வசதியை பி.எஸ்.என்.எல். விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதுபற்றி தமிழ்நாடு சர்க்கிள் பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் முகமது அஷ்ரப்கான் கூறியதாவது:-
பி.எஸ்.என்.எல். பிராட் பேண்ட் வசதியுடன் கொண்ட தரைவழி டெலிபோன் சந்தாதாரர்கள் இதை தங்களது டெலிபோனில் பேசுபவர்களின் உருவத்தை நேரில் பார்த்தவாறு பேசும் வசதி இன்னும் 3 மாதத்தில் அறிமுகம் செய்கிறது.
அதற்கான நவீன வசதியுடன் கூடிய டெலிபோனை பொறுத்தினால் பேசுபவர்களின் உருவத்தையும் குரலையும் கேட்கலாம். இந்த வசதி ஏற்கனவே பி.எஸ்.என்.எல். வடக்கு, மற்றும் மேற்கு மண்டலங்களில் செயல்பாட்டில் உள்ளது.
இன்டர்நெட் வசதியுடன் வீடியோ கால் வசதிக்கான கருவியை பொருத்தினால் இந்த வசதியை பெறலாம். சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த வசதி விரைவில் வர உள்ளது.
பி.எஸ்.என்.எல். கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 3ஜி இணைப்புகளுக்கு 1000 டவர்கள் மூலம் சேவை வழங்கப்படுகிறது. மேலும் 500 டவர்கள் அமைக்கப்படுகின்றது. 1140 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆப்டிக் பைபர் கேபிள் போடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : மாலைமலர் (08/10/2012)
Monday, 1 October 2012
பிரீபெய்டு "டாப்- அப்' : டிராய் புதிய உத்தரவு
புதுடில்லி:"மொபைல் போன் "பிரீபெய்டு' பயனீட்டாளர்கள் வாங்கும், "டாப்-அப்'
கூப்பன்களுக்கான மொத்த விலையில், அதிக பட்சம் 10 சதவீதம் அல்லது மூன்று
ரூபாய் மட்டுமே நிர்வாகக் கட்டணமாக பிடித்துக் கொள்ள வேண்டும்' என,
தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) உத்தரவிட்டுள்ளது.
இந்த
வகையில், 20 ரூபாய்க்கும் கீழாக, "டாப்-அப்' செய்யும் பயனீட்டாளர்கள் பயன்
அடைவர். தற்போது, 20 ரூபாய்க்கு மேல் வாங்கும், "டாப்- அப்' கூப்பன்களுக்கு
நிர்வாகக் கட்டணமாக, மூன்று ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. "டிராய்'
உத்தரவையடுத்து, 20 ரூபாய்க்கு, "டாப்-அப்' கார்டு வாங்கினால், இனிமேல்
இரண்டு ரூபாய் மட்டுமே நிர்வாகக் கட்டணமாக பிடித்தம் செய்யப்படும்.
நன்றி : தினமலர் (02/10/2012)
Sunday, 30 September 2012
பிஎஸ்என்எல் மற்றும் விஷ்டெல் இணைந்து களமிறக்கும் புதிய டேப்லட்
டேப்லெட் பிசிகளைத் தயாரித்து வரும் விஷ்டெல் நிறுவனம் பிஎஸ்என்எல்
நிறுவனத்துடன் இணைந்து அக்டோபர் 1 அன்று ஒரு புதிய டேப்லெட் பிசியைக்
களமிறக்குகிறது. இந்த டேப்லெட்டிற்கு இரா ஐகன் என்று பெயர்
சூட்டப்பட்டிருக்கிறது.
இந்த இரா ஐகன் டேப்லெட் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது.
குறிப்பாக 7 இன்ச் டிஎப்டி எல்சிடி கப்பாசிட்டிவ் மல்டி டச் திரையுடன்
வரும் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 இயங்கு தளம் மற்றும் 1.2 ஜிஹெர்ட்ஸ்
ப்ராசஸர் போன்றவற்றைக் கொண்டு வருகிறது.
மேலும் இந்த டேப்லெட்டில் 1ஜிபி ரேம் மற்றும் 3ஜி சிம் போன்றவையும்
உள்ளன. அதோடு இந்த டேப்லெட்டில் 3ஜி, வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற இணைப்பு
வசதிகளும் உள்ளன. இந்த டேப்லெட்டில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும்
மைக்ரோபோன் ஆகியவைக் கொண்டிருப்பதால் இதில் சூப்பாரக பாடல்களைக் கேட்கலாம்.
இந்த டேப்லெட் யுஎஸ்பி, எஸ்டி கார்டு, ஆடியோ மற்றும் வீடியோ போன்ற
வசதிகளையும் வழங்குகிறது. கேமராவைப் பொருத்தமட்டில் இந்த டேப்லெட்டில்
2.0எம்பி பின்பக்க கேமராவும் மற்றும் 0.3எம்பி முகப்பு வெப் கேமராவும்
உள்ளன. இதன் 4ஜிபி சேமிப்பை 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும்.
ரூ.10,500க்கு விற்பனைக்கு வரும் இந்த இரா டேப்லெட் பிஎஸ்என்எல்லின் 3ஜி
சிம் மற்றும் 2 மாதங்களுக்கான இலவச 2ஜிபி 3ஜி டேட்டாவையும் வழங்குகிறது.
நன்றி : தட்ஸ்தமிழ் (30/09/2012)
Friday, 28 September 2012
Monday, 24 September 2012
2013 முதல் செல்பேசிகளுக்கு ரோமிங் கட்டணம் கிடையாது : கபில் சிபல்
புது தில்லி, செப்.,
24 : 2013ம் ஆண்டு முதல் செல்பேசிகளுக்கான ரோமிங் கட்டணம் வசூலிக்கப்பட
மாட்டாது என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
புது
தில்லியில் இன்று நடைபெற்ற இந்தியாவின் இணையதள ஆளுமை தொடர்பான மாநாட்டில்
கலந்து கொண்டு பேசிய கபில் சிபல், 2012ம் ஆண்டுக்கான தேசிய தொலைத் தொடர்பு
கொள்கையில், செல்பேசிகளுக்கான ரோமிங் கட்டணத்தை 2013ஆம் ஆண்டு முதல் ரத்து
செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஆண்டு முதல் ரோமிங் கட்டணம்
கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமணி
Tuesday, 11 September 2012
NO ISD FACILITY FOR PREPAID MOBILE USERS
Telecom regulator Trai has asked telecom companies to de-activate the
international calling facility in pre-paid numbers and restore it only
after a subscriber gives his explicit consent to avail this facility.
"Inform all pre-paid subscribers having ISD facility, through
SMS, within 10 days of the date of issue of this direction, that ISD
facility of the subscribers shall be discontinued after sixty days,"
Telecom Regulatory Authority of India (Trai) said in a directive to
telcos.
"If such subscribers want to continue with ISD facility, they
should give their explicit consent for availing such facility within 60
days of the receipt of the SMS," it added.
Trai has issued this directive following complaints from
consumers about missed calls from international telephone numbers which
are often premium numbers charging high tariff, prompting the consumers
to make call to such numbers.
Trai said it has also been receiving complaints from consumers
about receiving calls and SMSes from international numbers informing
them about winning of prizes or lottery and prompting consumers to call a
particular number to claim the prize or lottery money.
"These numbers are international numbers, which are often premium
numbers charging higher tariffs. By responding to such calls/SMS the
consumers have to pay unintended charges," Trai said.
The regulator has asked telecom operators to inform subscribers
through SMS, within 10 days of the direction, that pre-paid cellular
mobile telephone service consumers need not respond to all missed calls
from unknown international numbers or calls about winning prizes or
lottery.
Trai has asked telecom service providers to send such SMS to
consumers every six months and provide easy and transparent opt-in and
opt-out facility to the consumers of the cellular mobile telephone
service for activation or deactivation of ISD facility.
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
Sunday, 19 August 2012
"சிம்' கார்டு வாங்க போலி ஆவணங்கள் கொடுத்தால்போலீசில் புகார் தெரிவிக்க உத்தரவு
புதுடில்லி:"மொபைல் போன், "சிம்' கார்டு பெறுவதற்காக, வாடிக்கையாளர்கள் போலியான ஆவணங்களைக் கொடுத்தால், சம்பந்தபட்ட டீலர்கள், இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க வேண்டும்' என, தொலை தொடர்புத் துறையின் புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சிலர், போலியான ஆவணங்களைக் கொடுத்து, மொபைல் போனுக்கான, "சிம்' கார்டுகளைப் பெற்று, அவற்றை, பயங்கரவாதச் செயல்களுக்காகப் பயன்படுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, "சிம்'கார்டுகள் வழங்குவதற்கு, புதிதாகக் கடுமையான விதிமுறைகளை, தொலை தொடர்புத் துறை உருவாக்கியுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள், நவம்பர் இரண்டாம் வாரத்திலிருந்து, அமலுக்கு வரவுள்ளன.
THANKS : DINAMALAR.
Friday, 17 August 2012
வீடியோ கால் வசதியுடன் லேண்ட்லைன்: பிஎஸ்என்எல் புதிய திட்டம்!
இந்த நிதியாண்டின் இறுதியில் வீடியோ
கால் போன்ற நவீன வசதிகளை லேண்டுலைன் தொலைபேசிகளில் வழங்க ரூ. 400 கோடியை முதலீடு
செய்ய திட்டமிட்டிருக்கிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.
அதாவது நெக்ஸ்ட் ஜெனரேஷன் நெட்வொர்க்
என்று சொல்ல கூடிய நவீன வசதிகளை இனி லேண்டுலைனில் வழங்க இருப்பதாக பிஎஸ்என்எல்
நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.கே. உபாத்தியாய் கூறியுள்ளார்.
மொபைல்போனுக்கு ஒப்பிட்டு
பார்க்கையில் லேண்டுலைன் வாடிக்கையாளர்கள் வெகுவாக குறைந்து வருகின்றனர் என்று
தான் சொல்ல வேண்டும். அதிலும் லேண்டுலைனை பயன்படுத்துவது கூட பிராடுபேண்டு
வசதிக்காக என்றாகிவிட்டது. இதனால் அரசு நடத்தும் பிஎஸ்என்எல் நிறுவனம் நவீன
வசதிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த நவீன வசதியின் மூலம் வீடியோ
காலிங், கால் ட்ராஸ்ஃபர் ஆகிய வசதிகளை லேண்ட்லைனிலும் பெறலாம். இன்னும் குறிப்பாக
சொல்லப்போனால், மொபைலில் பெற கூடிய வசதிகள் அனைத்தையும் லேண்ட்லைனிலும் பெற
இத்திட்டம் வழிவகுக்கும்.
இதனால் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு
கிடைக்கும் வசதிகள் இனி லேண்ட்லைன் வாடிக்கையாளர்களும் பயன்படுத்தும் வகையில்
மேம்படுத்தப்பட்ட வசதிகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.
நெக்ஸ்ட் ஜெனரேஷன் நெட்வொர்க் என்ற
நவீன வசதியின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்க முடியும்
என்பதோடு, செயல்பாடு மற்றும் பராமரிப்பின் செலவுகளையும் சற்று கட்டுப்படுத்த
முடியும் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குனருமான
ஆர். கே. உபாத்தியாய் தெரிவித்திருக்கிறார்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மார்கெட்
பங்குகளின் மதிப்பு 69 சதவிகிதமாக உள்ளது. கடந்த மே மாதம் 3.15 கோடியாக இருந்த
மொத்த லேண்டுலைன் வாடிக்கையாளர்கள்களின் எண்ணிக்கை, ஜூன் மாதம் 31.43 கோடியாக
குறைந்துள்ளதாக புள்ளிவிவரம் காட்டுகிறது.
இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் 2.17
கோடி லேண்டுலைன் வாடிக்கையாளர்களையும், 9.8 கோடி மொபைல்போன் வாடிக்கையாளர்களையும்
கொண்டுள்ளது. இந்த தகவல்கள் லேண்டுலைன் வாடிக்கையாளர்கள் குறைந்து வருவதையே
குறிக்கிறது.
இதனால் மொபைல்போனில் உள்ள வசதிகளை லேண்டுலைனிலும் வழங்க
ரூ. 400 கோடியை முதலீடு செய்யும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திட்டத்தின் மூலம்
நிச்சயம் லேண்டுலைன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும் என்று நம்பலாம்.
நன்றி : தட்ஸ் தமிழ்
ரம்ஜான் பண்டிகையையொட்டி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சிறப்பு சலுகை...
சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு(ப்ரீபெய்டு பிளான்)
ரூ.786க்கு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு
பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி ரூ.786க்கு
ரீசார்ஜ் செய்யும் பிரீபெய்டு செல்போன் வாடிக்கையாளர்கள் 1,572 நிமிடங்களுக்கு
கட்டணமின்றி பேசலாம். இதில் 786 நிமிடங்கள் பி.எஸ்.என்.எல். உள்ளூர், எஸ்.டி.டி.
எண்களுக்கும், மீதமுள்ள 786 நிமிடங்கள் தனியார் நிறுவன உள்ளூர், எஸ்.டி.டி.
எண்களுக்கும் பேசலாம்.
மேலும் 786 எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்,
786 எம்.பி.க்கு தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சலுகை 2ஜி, 3ஜி
சேவை ஆகிய இரண்டுக்கும் பொருந்தும்.
ரீசார்ஜ் செய்து 90 நாட்கள் வரை இந்த சலுகையை பயன்படுத்தலாம். இந்த மாதம் 21ம் தேதி வரை இந்த சிறப்பு சலுகை அமலில் இருக்கும்.
ரீசார்ஜ் செய்து 90 நாட்கள் வரை இந்த சலுகையை பயன்படுத்தலாம். இந்த மாதம் 21ம் தேதி வரை இந்த சிறப்பு சலுகை அமலில் இருக்கும்.
இது தவிர ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ஈ-ரீசார்ஜ் மற்றும் கார்டு மூலம் ரூ.110, ரூ.220, ரூ.440 மற்றும் ரூ.550க்கு ரீசார்ஜ் செய்தால் முழு தொகைக்கு பேசலாம். இந்த சலுகை வரும் 30 வரை மட்டுமே அமலில் இருக்கும்.
நன்றி : தட்ஸ் தமிழ்
Subscribe to:
Posts (Atom)