பிஎஸ்என்எல் ரூபாய் 110 முழு தொகைக்கு பேசலாம் இந்த வசதி 27/06/2015 முதல் 29/06/2015 வரை BSNL FULL TALK VALUE OFFER FOR RS.110 FROM 27/06/2015 TO 29/06/2015

Monday, 8 October 2012

பிராட்பேண்ட் வசதியுள்ள பி.எஸ்.என்.எல். டெலிபோனில் வீடியோ வசதி அறிமுகம்

சென்னை, அக் 8-

தகவல் தொழில்நுட்பத்துறையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. உலகின் எந்த மூளையில் இருந்தாலும் நொடிப்பொழுதில் தொடர்பு கொள்ளக்கூடிய தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளன.

பிராட்பேண்ட் வசதி உள்ளவர்கள் வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் கம்ப்யூட்டர் மூலமாக தொடர்பு கொண்டு பேசலாம். வெப் மூலம் இரு முனைகளில் உள்ளவர்கள் முகங்களை பார்த்து நேரில் பேசுவது போல இன்டர்நெட் வழியாக பேசமுடியும். இருவரின் உருவமும் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் தெரியும்.

இந்த வசதியை வீட்டில் இருந்தோ, அல்லது கம்ப்யூட்டர் மையங்களில் இருந்தோ பெறலாம். தற்போது அதைவிட நவீனமயமாக டெலிபோனில் தொடர்பு கொண்டாலே எதிர் முனையில் உள்ளவர்களின் உருவம் டெலிபோனில் வீடியோ படம்போல் தெரியும்.

இந்த நவீன வசதியை பி.எஸ்.என்.எல். விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதுபற்றி தமிழ்நாடு சர்க்கிள் பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் முகமது அஷ்ரப்கான் கூறியதாவது:-

பி.எஸ்.என்.எல். பிராட் பேண்ட் வசதியுடன் கொண்ட தரைவழி டெலிபோன் சந்தாதாரர்கள் இதை தங்களது டெலிபோனில் பேசுபவர்களின் உருவத்தை நேரில் பார்த்தவாறு பேசும் வசதி இன்னும் 3 மாதத்தில் அறிமுகம் செய்கிறது.

அதற்கான நவீன வசதியுடன் கூடிய டெலிபோனை பொறுத்தினால் பேசுபவர்களின் உருவத்தையும் குரலையும் கேட்கலாம். இந்த வசதி ஏற்கனவே பி.எஸ்.என்.எல். வடக்கு, மற்றும் மேற்கு மண்டலங்களில் செயல்பாட்டில் உள்ளது.

இன்டர்நெட் வசதியுடன் வீடியோ கால் வசதிக்கான கருவியை பொருத்தினால் இந்த வசதியை பெறலாம். சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த வசதி விரைவில் வர உள்ளது.

பி.எஸ்.என்.எல். கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 3ஜி இணைப்புகளுக்கு 1000 டவர்கள் மூலம் சேவை வழங்கப்படுகிறது. மேலும் 500 டவர்கள் அமைக்கப்படுகின்றது. 1140 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆப்டிக் பைபர் கேபிள் போடப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

நன்றி : மாலைமலர்  (08/10/2012)

Monday, 1 October 2012

பிரீபெய்டு "டாப்- அப்' : டிராய் புதிய உத்தரவு

புதுடில்லி:"மொபைல் போன் "பிரீபெய்டு' பயனீட்டாளர்கள் வாங்கும், "டாப்-அப்' கூப்பன்களுக்கான மொத்த விலையில், அதிக பட்சம் 10 சதவீதம் அல்லது மூன்று ரூபாய் மட்டுமே நிர்வாகக் கட்டணமாக பிடித்துக் கொள்ள வேண்டும்' என, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) உத்தரவிட்டுள்ளது.

இந்த வகையில், 20 ரூபாய்க்கும் கீழாக, "டாப்-அப்' செய்யும் பயனீட்டாளர்கள் பயன் அடைவர். தற்போது, 20 ரூபாய்க்கு மேல் வாங்கும், "டாப்- அப்' கூப்பன்களுக்கு நிர்வாகக் கட்டணமாக, மூன்று ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. "டிராய்' உத்தரவையடுத்து, 20 ரூபாய்க்கு, "டாப்-அப்' கார்டு வாங்கினால், இனிமேல் இரண்டு ரூபாய் மட்டுமே நிர்வாகக் கட்டணமாக பிடித்தம் செய்யப்படும்.

நன்றி : தினமலர் (02/10/2012)