டேப்லெட் பிசிகளைத் தயாரித்து வரும் விஷ்டெல் நிறுவனம் பிஎஸ்என்எல்
நிறுவனத்துடன் இணைந்து அக்டோபர் 1 அன்று ஒரு புதிய டேப்லெட் பிசியைக்
களமிறக்குகிறது. இந்த டேப்லெட்டிற்கு இரா ஐகன் என்று பெயர்
சூட்டப்பட்டிருக்கிறது.
இந்த இரா ஐகன் டேப்லெட் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது.
குறிப்பாக 7 இன்ச் டிஎப்டி எல்சிடி கப்பாசிட்டிவ் மல்டி டச் திரையுடன்
வரும் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 இயங்கு தளம் மற்றும் 1.2 ஜிஹெர்ட்ஸ்
ப்ராசஸர் போன்றவற்றைக் கொண்டு வருகிறது.
மேலும் இந்த டேப்லெட்டில் 1ஜிபி ரேம் மற்றும் 3ஜி சிம் போன்றவையும்
உள்ளன. அதோடு இந்த டேப்லெட்டில் 3ஜி, வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற இணைப்பு
வசதிகளும் உள்ளன. இந்த டேப்லெட்டில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும்
மைக்ரோபோன் ஆகியவைக் கொண்டிருப்பதால் இதில் சூப்பாரக பாடல்களைக் கேட்கலாம்.
இந்த டேப்லெட் யுஎஸ்பி, எஸ்டி கார்டு, ஆடியோ மற்றும் வீடியோ போன்ற
வசதிகளையும் வழங்குகிறது. கேமராவைப் பொருத்தமட்டில் இந்த டேப்லெட்டில்
2.0எம்பி பின்பக்க கேமராவும் மற்றும் 0.3எம்பி முகப்பு வெப் கேமராவும்
உள்ளன. இதன் 4ஜிபி சேமிப்பை 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும்.
ரூ.10,500க்கு விற்பனைக்கு வரும் இந்த இரா டேப்லெட் பிஎஸ்என்எல்லின் 3ஜி
சிம் மற்றும் 2 மாதங்களுக்கான இலவச 2ஜிபி 3ஜி டேட்டாவையும் வழங்குகிறது.
நன்றி : தட்ஸ்தமிழ் (30/09/2012)